சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்த கார் - 3 பேர் படுகாயம்
அம்மையநாயக்கனூர் அருகே சாலையில் தாறுமாறாக ஓடிய கார் விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
அம்மையநாயக்கனூர்,
திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார் நான்குவழிச்சாலையில் அம்மையநாயக்கனூர் நக்கம்பட்டி மேம்பாலம் என்ற இடத்தில் வந்தபோது நிலைதடுமாறி தாறுமாறு ஓடி எதிர்புறம் சாலையை உருண்டு பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் கார் ஓட்டிவந்த சிவகங்கையை சேர்ந்த ராணுவ வீரர் அசோக் குமார்(வயது 24) மற்றும் கருப்பு ராஜா(34), சரவணன்(20) ஆகியோர் படுகாயம் அடைந்னர்.
இவர்களை அந்த வழியாக வந்த இளைஞர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த அம்மையநாயக்கனூர் போலீசார் விபத்துக்கு உள்ளான காரை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.