ஏலக்காய் விலை கிடுகிடு உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
வரத்து குறைவால் ஏலக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி
தமிழகத்தில் தேனி மாவட்டத்திலும், கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலும் ஏலக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தநிைலயில் தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் அடிக்கடி கனமழை பெய்து வருவதுடன், பலத்த காற்று வீசுகிறது.
இதனால் ஏலக்காய் செடிகள் சேதம் அடைந்தன. மேலும் ஏலக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வரத்து குறைந்ததால் ஏலக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.750 என விற்ற ஏலக்காய், தற்போது கிலோ ரூ.1,100-க்கு விற்பனையானது.
ஒருபுறம் ஏலக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டாலும், அதன் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story