இருதய கமலநாதசாமி கோவில் தெப்ப உற்சவம்
வலிவலம் இருதய கமலநாதசாமி கோவில் தெப்ப உற்சவம் நடந்தது.
நாகப்பட்டினம்
சிக்கல்:
கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலத்தில் இருதய கமலநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சாமி பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடந்தது. முன்னதாக சோமாஸ்கந்தர், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர். பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தெப்பம் குளத்தில் 3 முறை வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story