போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்


போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
x

போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தினார்.

ராணிப்பேட்டை

கலவை போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து, கலவை போலீஸ் நிலையத்திற்கு அரசால் வழங்கப்பட்டுள்ள பொருட்களையும் பார்வையிட்டார். மேலும் கலவைப் பகுதியில் உள்ள ரவுடிகள் குறித்தும் விசாரித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

போலீஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்துள்ளதை பார்வையிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை உடனுக்குடன் முடிக்கவும், போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

போலீஸ்நிலையத்துக்கு வருபவர்களிடத்தில், எளிமையாகவும், அன்பாகவும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். இன்ஸ்பெக்டர் பாரதிதாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், மூர்த்தி, சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story