மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி வாலிபர் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.
கரூர்
கரூர் மாவட்டம், உன்னூத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 35). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கரூர்- ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோ, பிரவீன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரவீன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பிரவீன் தந்தை பழனிச்சாமி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, சரக்கு ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story