சரக்கு ஆட்டோவுக்கு தீ வைப்பு


சரக்கு ஆட்டோவுக்கு தீ வைப்பு
x

அம்பை அருகே சரக்கு ஆட்டோவுக்கு தீ வைக்கப்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை அருகே உள்ள பிரம்மதேசம் நாடார் தெருவில் வசிக்கும் சங்கரலிங்கம் என்பவருடைய மகன் கண்ணன் (வயது 40). இவர் கொத்தனார் காண்டிராக்ட் வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவை நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோவுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story