ஸ்கூட்டர் மீது சரக்கு வேன் மோதி பத்திர எழுத்தர் தலைநசுங்கி பலி
ஸ்கூட்டர் மீது சரக்கு வேன் மோதி பத்திர எழுத்தர் தலைநசுங்கி பலி
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே ஸ்கூட்டர் மீது சரக்கு வேன் மோதி பத்திர எழுத்தர் தலைநசுங்கி பலியானார். இதுதொடர்பாக சரக்கு வேன் டிரைவரை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர்.
சரக்கு வேன் மோதியது
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அகர எலத்தூர் ஊராட்சி சோத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது55). இவர் சீர்காழியில் தங்கி பத்திரம் எழுத்தராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று மாலை ஸ்கூட்டரில் உமையாள்பதி கிராமத்தில் இருந்து சீர்காழியை நோக்கி சென்று கொண்டிருந்தார். கடவாசல் குறுக்கு சாலையில் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே திருமுல்லைவாசலை நோக்கி மீன் ஏற்றி சென்ற சரக்கு வேன், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவருக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிச்சந்திரன் உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய சரக்கு வேன் டிரைவரை வலைவீசி ேதடி வருகின்றனர்.