சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து


சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து
x

வேலூரில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

வேலூர்

பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.

வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்துவாச்சாரி போலீசார் அங்கு வந்து வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியிலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.


Next Story