ஸ்கூட்டர் மீது சரக்கு வாகனம் மோதல்
ஸ்கூட்டர் மீது சரக்கு வாகனம் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே நெல்லியாம்பதி பகுதியை சேர்ந்தவர்கள் விஜயன் (வயது 50), சசிதரன் (50). இவர்கள் 2 பேரும் எருமாட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அத்திசால் அருகே சென்ற போது, அய்யன்கொல்லியில் இருந்து எருமாடு நோக்கி வந்த சரக்கு வாகனம் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் விஜயன், சசிதரன் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். விஜயன் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியிலும், சசிதரன் சுல்தான்பத்தேரி ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சேரம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் மற்றும் போலீசார் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story