காரீப் முன்பருவ முகாம்


காரீப் முன்பருவ முகாம்
x

மணவாளக்குறிச்சியில் காரீப் முன்பருவ முகாம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

மணவாளக்குறிச்சி பெரியகுளம் ஏலா பகுதியில் காரீப் முன்பருவ முகாம் நடந்தது. முகாமிற்கு குமரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஹனி ஜாய் சுஜாதா தலைமை தாங்கினார். தக்கலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சர்மிளா வரவேற்று பேசினார். முகாமில் மணவாளகுறிச்சி பெரியகுளம் ஏலா பாசனதாரர் சங்க தலைவர் ராஜ்குமார் பங்கேற்று 'அனைத்து விவசாயிகளும் பெரியகுளம் ஏலா பகுதியில் மீண்டும் நெல் விவசாயம் செய்ய ஏதுவாக அனைத்து பணிகளையும் தொடங்க வேண்டும்' என்றார். திருப்பதிசாரம் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மெர்டல் கிரேஸ் நெல் பொடி விதைப்பு மற்றும் நாற்றங்கால் பராமரித்து நடுதல் குறித்து எடுத்துரைத்தார். குமரி மாவட்ட தகவல் மற்றும் தரகட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குனர் ஜோஸ் கோடை உழவு செய்வதின் மூலம் மண்ணிற்குள் கூட்டுப்புழு பருவத்தில் உள்ள பூச்சிகள் அழிக்கப்படுவது குறித்து எடுத்துரைத்தார். முகாமில் விதை கிராம திட்டத்தின் கீழ் மானியத்தில் ஏ.எஸ்.டி.16 மற்றும் டி.பி.எஸ். 5 நெல் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் பிரபாகரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஜெபின், அழகுதேவி, வனஜா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story