விடுதியில் அழுகிய நிலையில் தச்சு தொழிலாளி பிணம்
மயிலாடுதுறையில் விடுதியில் அழுகிய நிலையில் தச்சு தொழிலாளி பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் விடுதியில் அழுகிய நிலையில் தச்சு தொழிலாளி பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழுகிய நிலையில் பிணம்
மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதி அறைகளில் இருந்து நேற்றுமுன்தினம் துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துர்நாற்றம் வந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார்.
இதை தொடர்ந்த உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் மயிலாடுதுறை விசித்ராயர் தெருவை சேர்ந்த ஜானகிராமன் (வயது 56) என்பதும், தச்சுத் தொழிலாளியான இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் இருந்து பிரிந்து வந்து விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.