தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து
தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
தர்மபுரி
நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை மாடுஒன்று நேற்று கடந்து சென்றது. அப்போது அந்த வழியாக வந்த கார் டிரைவர் மாடு மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது பின்னால் வந்த கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 காரில் சென்றவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கசாவடி ரோந்து படையினர்ட விபத்துக்குள்ளான கார்களை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story