அடுத்தடுத்து கார்கள் மோதல்; பெண் சாவு


அடுத்தடுத்து கார்கள் மோதல்; பெண் சாவு
x
தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் பெண் இறந்தார். இவரது கணவர்-மகன் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி அருகே அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் பெண் இறந்தார். இவரது கணவர்-மகன் படுகாயம் அடைந்தனர்.

கார்கள் மோதல்

தென்காசி மாவட்டம் பேட்டன்புதூரை சேர்ந்தவர் அகமது மொய்தீன் (வயது40). இவரது மனைவி சபியா பேகம் (36). இவர்களின் மகன் முகமது தவுபிக் (10). இவர்கள் சொந்த வேலையாக பெங்களூரு வந்தனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் இரவு காரில் சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். காரை அகமது மொய்தீன் ஓட்டி சென்றார்.

இந்த நிலையில் சூளகிரி பவர்கிரீடு அருகே கார் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. இருப்பினும் அந்த கார் அடுத்த சாலைக்கு சென்று அந்த வழியாக வந்த கார் மீதும் மோதியது. இதனால் கார்கள் அடுத்தடுத்து மோதின. இந்த விபத்தில் சபியாபேகம் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவர்-மகன் படுகாயம்

மேலும் அகமது மொய்தீன், சிறுவன் முகமது தவுபிக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுவன் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 2 கார்களில் வந்தவர்கள் லேசான காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் விரைந்து சென்று சபியா பேகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story