ஓசூர், ஊத்தங்கரை பகுதிகளில்கோர்ட்டுகளில் ஆஜராகாத 13 பேர் மீது வழக்கு


ஓசூர், ஊத்தங்கரை பகுதிகளில்கோர்ட்டுகளில் ஆஜராகாத 13 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 July 2023 1:00 AM IST (Updated: 10 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் மற்றும் ஊத்தங்கரை பகுதிகளில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 13 பேருக்கு ஓசூர், ஊத்தங்கரை கோர்ட்டுகளில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் நிபந்தனை உத்தரவுகளை கடைபிடிக்காமலும், கோர்ட்டில் ஆஜராகாமலும் இருந்து வந்தனர். இதுதொடர்பாக ஓசூர் டவுன் மற்றும் ஊத்தங்கரை போலீசார் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story