கோஷ்டி மோதல்; 7 பேர் மீது வழக்கு


கோஷ்டி மோதல்; 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 July 2023 1:00 AM IST (Updated: 29 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

நாகரசம்பட்டி அருகே சின்ன கரடியூரை சேர்ந்தவர் மாரி (வயது 60). பெரிய கரடியூரை சேர்ந்தவர் பாலாஜி (27). இவர்கள் இருவருக்கும் நிலத்தில் மாடு மேய்ந்தது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். இதில் மாரி காயம் அடைந்தார். அவர் கொடுத்த புகரின் பேரில் பாலாஜி (27), ராஜா மணி (63), நாகராஜ் (66) ஆகிய 3 பேர் மீது நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் பெரியசாமி (70), மாரி (60) உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story