வாலிபரிடம் ரூ.97 ஆயிரம் நூதன மோசடி


வாலிபரிடம் ரூ.97 ஆயிரம் நூதன மோசடி
x

விமான நிலையத்தில் வேலை வாங்கித்தருவதாக கமுதி வாலிபரிடம் ரூ.97 ஆயிரம் நூதன முறையில் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

விமான நிலையத்தில் வேலை வாங்கித்தருவதாக கமுதி வாலிபரிடம் ரூ.97 ஆயிரம் நூதன முறையில் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விண்ணப்பம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பாக்குவெட்டி கிராமம் தெற்குத்தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் ராமர் (வயது30). இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்து தற்போது முதுகுளத்தூரில் உள்ள எரிவாயு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர் விமானநிலையத்தில் வேலையில் சேர்வதற்காக இணைய தளத்தில் பதிவு செய்து வைத்துள்ளார். இந்தநிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி ராமரை தொடர்பு கொண்ட நபர் ஏர்போர்ட் வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பம் செய்து இருக்கிறீர்களா என்று கேட்டு உங்களின் சுய விவரங்களை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டு பெற்றுள்ளார்.

மேலும், தற்போது ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி விமான நிலையத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி, அதற்கான விதிமுறைகளின் படி பதிவு கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் என்று பல முறை தெரிவித்து மொத்தம் ரூ.96ஆயிரத்து 950 பணத்தை அவர்களின் வங்கி கணக்கு மற்றும் பேடிஎம் வாயிலாக பெற்றுக் கொண் டார்களாம்.

பலமுறை பணம் அனுப்பியும் பணம் கேட்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படு கின்றனர். வேலைவாய்ப்பு குறித்து எந்த தகவலும் இல்லையே என்று சிந்தித்த ராமர் மதுரை விமான நிலையத்தில் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.

புகார்

அப்போது அவர்கள் எந்த விமான நிலையத்திற்கும் தற்போது ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறிவிட்டார் களாம். இதனால் தன்னை ஐதராபாத் ராஜீவ்காந்தி விமானநிலையத்தில் வேலைக்கு ஆட்கள் எடுப்பது போல் போலியான ஆவணங்களை அனுப்பி, அதற்கு பல்வேறு கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று தெரிவித்து பணம் பெற்று ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமர் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story