சார்பதிவாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு


சார்பதிவாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு
x

சார்பதிவாளர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

சாயல்குடி அருகே உள்ள துரைசாமிபுரம் தெரு பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மனைவி பூமயில் (வயது71). இவருக்கு சாயல்குடி பகுதியில் 48.75 சென்ட் பூர்வீக பாத்தியப்பட்ட நிலம் உள்ளது. பூமயிலின் தந்தை சித்திரவேல் என்பவர் மேற்கண்ட நிலத்தினை கடந்த 1976-ம் ஆண்டு அன்னக்கிளி என்பவரிடம் அடமானம் வைத்து அதனை மீட்காமல் அன்னக்கிளியும், சித்திரவேலும் இறந்தவிட்டார்களாம்.

இதனை அறிந்த தூத்துக்குடி பூபாலபுரம் அந்தோணிராஜ் மனைவி பேச்சியம்மாள் என்பவர் சாயல்குடி குழந்தைதிரசு என்பவரை வைத்து ஆள்மாறாட்டம் செய்து சாயல்குடி சார்பதிவாளர் சந்தான லெட்சுமி உதவியுடன் போலியான ரசீது தயார் செய்தார்களாம். அந்த போலி ஆவணத்தில் சாயல்குடி ராபர்ட்கென்னடி, மரியசேசு ஆகியோர் சாட்சி கையெழுத்திட்டார்களாம்.

இந்த போலியான ஆவணத்தினை ஆவண எழுத்தர் கண்ணப்பன் மற்றும் முத்துமணி ஆகியோர் தயாரித்துக் கொடுத்ததன் அடிப்படையில் அனைவரும் கூட்டு சேர்ந்து கண்ணன் என்பவருக்கு கிரையம் மோசடி செய்துவிட்டார்களாம்.

இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இதுபற்றி அறிந்த பூமயில் இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின்பேரில் சார்பதிவாளர் உள்பட 8 பேர் மீது ராமநாதபுரம் நிலமோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Next Story