சில்லி சிக்கன் கடைக்காரரை மிரட்டிய லாரி டிரைவர் மீது வழக்கு


சில்லி சிக்கன் கடைக்காரரை மிரட்டிய லாரி டிரைவர் மீது வழக்கு
x

சில்லி சிக்கன் கடைக்காரரை மிரட்டிய லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நாமக்கல்

சேந்தமங்கலம், ஜூன்.7-

கொல்லிமலை ஒன்றியம் அரியூர்நாடு ஊராட்சி தெம்பளம் கிராமத்தில் சரவணன் என்பவர் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அருள்குமார் வந்தார். அவர் திடீரென சரவணனிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் அவரை கத்தியால் கழுத்தை அறுத்து விடுவதாக அருள்குமார் மிரட்டினார். இதையடுத்து கடையில் இருந்த பொருட்களை அவர் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார். இந்தநிலையில் நேற்று காலை லாரி டிரைவர் அருள்குமார் சேந்தமங்கலத்தில் இருந்து அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு சென்ற தனியார் பஸ் மீது கல்லை வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இந்த சம்பவங்கள் குறித்து சில்லி சிக்கன் கடைக்காரர் சரவணன், தனியார் பஸ் டிரைவர் மற்றும் அரியூர்நாடு ஊராட்சி மன்ற தலைவர் நாகலிங்கம் ஆகியோர் செம்மேடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story