சிறுமிக்கு திருமணம்; 5 பேர் மீது வழக்கு


சிறுமிக்கு திருமணம்; 5 பேர் மீது வழக்கு
x

ஓமலூர் அருகே சிறுமிக்கு திருமணம்; 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

சேலம்

ஒமலூர்:

ஓமலூரை அடுத்த செங்கனூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவிக்கு தகவல் கிடைத்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில் பாகல்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் 13 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்தது உறுதி செய்யப்பட்டது. உடனே போலீசார் சிறுமியின் பெற்றோர் மற்றும் மணமகன், மணமகனின் பெற்றோர் என 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story