2 கிராமத்தினர் இடையே மோதல்; 500 பேர் மீது வழக்கு


2 கிராமத்தினர் இடையே மோதல்; 500 பேர் மீது வழக்கு
x

முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியில் நடந்த தகராறு தொடர்பாக 2 கிராமத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே கபடி போட்டியில் நடந்த தகராறு தொடர்பாக 2 கிராமத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

கபடி போட்டி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர், கீழக்கன்னிசேரி ஆகிய கிராமங்கள் உள்ளன. விளங்குளத்தூரில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது. அப்போது 2 கிராம இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் விளங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த கணேசன், அருண்குமார், தினேஷ்குமார் ஆகிய 3 பேரும் முதுகுளத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது கீழக்கன்னிசேரி கிராமத்தை சேர்ந்த 5 பேர் வழிமறித்து தாக்கினர்.

மேலும் கீழக்கன்னிசேரி கிராமத்தை சேர்ந்த பிரகாசம் பஸ்சில் செல்லும்போது விளங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் பிரகாசத்தை வழிமறித்து தாக்கியது. இதையடுத்து 2 கிராமத்தினர் மோதலில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

500 பேர் மீது வழக்கு

தகவல் அறிந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கதுரை, முதுகுளத்தூர் தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் 2 கிராம மக்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் கொடுத்த புகாரின் பேரில் 2 கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 கிராமங்களிலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story