காங்கிரசார் 150 பேர் மீது வழக்குப்பதிவு
தர்மபுரியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி
காங்கிரஸ் கட்சியின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் மத்திய அரசின் அமலாக்கத்துறையை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அனுமதி இன்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக பெண்கள் உள்பட 150 காங்கிரசார் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story