மணியனூரில் நிலத்தகராறில் இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு
மணியனூரில் நிலத்தகராறில் இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே மணியனூர் குட்டையங்காடு பகுதியை வேர்ந்தவர் பழனியப்பன் (வயது 58). விவசாயி. இவருடைய மனைவி தங்கமணி (52). இவருடைய மகன்கள் தேவராஜ் (29), பெரியசாமி (27). இவர்களது குடும்பத்துக்கும், உலகபாளையம் ரவிக்குமார் (55), அவருடைய தம்பி செல்வகுமார் (50), ரவிக்குமாரின் மகன் மனோஜ் (24), உறவினர் சண்முகம் (56) என்பவர்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் தகாத வார்த்தைகளால் திட்டி கட்டைகளால் தாக்கி கொண்டனர். தகராறில் காயம் அடைந்த செல்வக்குமார், சண்முகம் ஆகியோர் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் பழனியப்பன் அவரது மனைவி தங்கமணி மகன் தேவராஜ் ஆகியோர் காயம் அடைந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் நல்லூர் போலீசார் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.