வக்கீலை தாக்கி கொலை மிரட்டல் ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு


வக்கீலை தாக்கி கொலை மிரட்டல் ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியை சேர்ந்தவர் விமல் (வயது 47). வக்கீல். ஆசிரியர் காலனி பகுதியில் இவருடைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வெங்கட்டம்பட்டி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் நுழைந்து தகராறில் ஈடுபட்டார். அப்போது விமலை தர குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த அலுவலகத்தில் இருந்த சேர் உள்ளிட்ட பொருட்களை உடைத்து விமலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக விமல் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story