ராயக்கோட்டையில் இரு தரப்பினர் மோதல்; 20 பேர் மீது வழக்கு


ராயக்கோட்டையில் இரு தரப்பினர் மோதல்; 20 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Oct 2022 12:30 AM IST (Updated: 30 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை:

ராயக்கோட்டையில் நேற்று முன்தினம் பண்டே தேவரு திருவிழா நடந்தது. திருவிழா முடிந்து வீடு திரும்பும்போது ரஞ்சித்குமார் என்பவருக்கும், நஞ்சுண்டன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் ராயக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story