குடிநீர் பிடிப்பதில் தகராறு: 5 பெண்கள் மீது வழக்கு


குடிநீர் பிடிப்பதில் தகராறு: 5 பெண்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் நாகராதன். இவருடைய மனைவி வினிதா (வயது 25). சம்பவத்தன்று அங்குள்ள பொது குழாயில் குடிநீர் பிடிக்க வினிதா சென்றார். அப்போது அவருடைய உறவினர்களான சிவகவுசல்யா (29), சிவரஞ்சிதா (27), சிவராகினி (24) ஆகியோருக்கும், வினிதாவுக்கும் குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. இதில் வினிதா தாக்கப்பட்டார். இதனால் மனவேதனை அடைந்த வினிதா வீட்டில் வாஸ்மஸ் எண்ணெயை குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து வினிதா பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சிவகவுசல்யா, சிவரஞ்சிதா, சிவராகினி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் சிவகவுசல்யா கொடுத்த புகாரின்பேரில் வினிதா, ஜீவிதா (21) ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


Next Story