பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு
பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருப்புல்லாணி,
திருச்சி மாவட்டம் துறையூர் சித்திரைப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தபாலசுப்பிரமணியன் மகன் சித்தார்த் (வயது19). இவர் மதுரை சிலைமானை சேர்ந்த பாலமுருகன் மகன் விக்னேஷ், கூடல் நகரைச் விக்னேஷ்வரன் ஆகியோருடன் சேர்ந்து ராமநாதபுரம் அருகே முத்துப்பேட்டையில் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஸ்வரன் ஊருக்கு சென்றுவிட்டதால் சித்தார்த் மற்றும் விக்னேஷ் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு ரெகுநாதபுரம் அய்யப்பன்கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். திரும்பி வரும்போது அவர்களின் கல்லூரியில் படிக்கும் பெரியபட்டினத்தை சேர்ந்த தவுபிக், அபுதாஹிர், காலித், இதாப் அலி மற்றும் சிலர் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியில் வந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சித்தார்த் உள்ளிட்டோர் இதுகுறித்து கேட்டபோது சிவா என்பவருடன் இனி தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது என்று எச்சரித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றார்களாம். அவர்கள் சென்றதும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த 2 மடிக்கணினி, மிக்சி, அடுப்பு ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியதோடு 2 செல்போன்களையும் எடுத்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சித்தார்த் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.