சார் பதிவு அலுவலர்களை மிரட்டிய 3 பேர் மீது வழக்கு
சேலம்
மேச்சேரி:
மேச்சேரியில் சார் பதிவாளராக ஹேமலதா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சார் பதிவாளர் அலுவலகத்துக்கு ஓமலூரை சேர்ந்த சதீஷ், மற்றொரு நபர் வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்துக்குள் சென்று ஆவணத்தை காண்பித்து பதிவு செய்து கொடுக்குமாறு கேட்டார்களாம். அதற்கு அங்கிருந்த அலுவலர்கள் மேற்படி ஆவணத்தை சரிபார்த்த பின்பு தான் பதிவு செய்ய முடியும் என்று கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் அலுவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சார் பதிவாளர் ஹேமலதா மேச்சேரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ேபாலீசார் சதீஷ் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story