சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள எஸ்.கொட்டாவூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற்றதாக சமூக நலத்துறையினருக்கு தொலைபேசி மூலம் புகார் வந்தது. இது தொடர்பாக துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த சிறுமிக்கு கர்த்தானூர் கிராமத்தை சேர்ந்த வேலு (வயது 28) என்ற வாலிபருடன் குழந்தை திருமணம் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வேலு மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire