ஓசூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு


ஓசூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 Jun 2023 1:00 AM IST (Updated: 23 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர் அலெக்ஸ்சாண்டர். இவர் பள்ளி வளர்ச்சி நிதி எனக்கூறி மாணவர்களிடம் ரூ.5 லட்சம் வரை வசூல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மாணவர்களை வைத்து தலைமை ஆசிரியரின் பணி இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி பள்ளி முன் போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதுதொடர்பாக முத்துக்குமார், மாதேவன், கோவிந்தராஜ், சக்கரவர்த்தி, மாரியப்பா, ரம்யா, தனபால், ரஹமத், சுபார் ஆகிய 9 பேர் மீது ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story