மதுபானங்களை பதுக்கி விற்ற 10 பேர் மீது வழக்கு
மதுபானங்களை பதுக்கி விற்ற 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் சிலர் மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையிலான போலீசார் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் மேலபட்டியைச்சேர்ந்த ஸ்டாலின் (வயது 29), மண்மங்கலத்தை சேர்ந்த லோகநாதன் (51), கல்லடையை சேர்ந்த முத்துச்சாமி (65), சோமுரை சேர்ந்த சரவணன் (47), சங்கரன்கோவிலை சேர்ந்த சேர்மதுரை (47), நஞ்சக்காளி குறிச்சியை சேர்ந்த கருப்பாத்தாள் (49), தோகைமலை அருகே கல்லடை அண்ணா நகரை சேர்ந்த கணபதி (48), அ.உடையாபட்டியை சேர்ந்த காமராஜ் (59), சுதாகர் (23), கீழவெளியூரை சேர்ந்த ரெங்கராஜ் (55) ஆகிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.