பள்ளிகள் அருகே போதை பொருள் விற்ற 13 பேர் மீது வழக்கு


பள்ளிகள் அருகே போதை பொருள் விற்ற 13 பேர் மீது வழக்கு
x

பள்ளிகள் அருகே போதை பொருள் விற்ற 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேலூர்

கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி தலைமையிலான போலீசார் போதை பொருள் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பான் மசாலா, குட்கா போன்ற போதை பொருட்கள் பள்ளிகளின் அருகில் விற்பனை செய்வது தெரிய வந்தது. இது தொடர்பாக 13 கடைக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.


Next Story