இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 15 பேர் மீது வழக்கு


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 15 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருமருகலில், சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 15 பேர் மீது வழக்கு

நாகப்பட்டினம்

திட்டச்சேரி;

கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரியும், கடைமடை பகுதிகளுக்கு குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் வழங்க வேண்டியும், குறுவை பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த கோரியும் திருமருகல் பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருமருகல் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன் உள்பட 15 பேர் மீது திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story