கணவன் மனைவியிடையே தகராறு 15 பேர் மீது வழக்கு
நிலப்பிரச்சினையில் கணவன் மனைவியிடையே தகராறு 15 பேர் மீது வழக்கு
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 42). இவரது மனைவி பத்மினி(39). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். பத்மியியிடம் அவரது தாய் வீட்டின் 3 சென்ட் வீ்ட்டுமனை மற்றும் 55 சென்ட் நிலத்தை விற்று தர சொல்லி கண்ணன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பத்மினி வயலில் இருந்தபோது கண்ணனும், இவரது மகன்களும் சேர்ந்து பத்மினியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து பத்மினி கொடுத்த புகரின் பேரில் கண்ணன், இவரது மகன்கள் மகிமதன், தமிழரசன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் பத்மினியும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து தன்னை தாக்கியதாக கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் பத்மினி, இவரது தாயார் பஞ்சவர்ணம் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.