கடந்த 3 நாட்களில் 1,712 பேர் மீது வழக்கு


கடந்த 3 நாட்களில் 1,712 பேர் மீது வழக்கு
x

நாகர்கோவிலில், கடந்த 3 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,712 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில், கடந்த 3 நாட்களில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,712 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாகன சோதனை

நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் மற்றும் பறிமுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று நாகர்கோவில் இந்து கல்லூரி சாலையில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், 3 பேர் பயணம் செய்தவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பயணம் செய்தது மற்றும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் வைத்திருந்த வாகனங்கள் என மொத்தம் 232 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

1,712 வழக்குகள் பதிவு

இதேபோல் மாநகருக்குட்பட்ட வடசேரி, பார்வதிபுரம், ஒழுகினசேரி, வெட்டூர்ணிமடம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, டெரிக் சந்திப்பு, ஆசாரிபள்ளம் உள்பட பல இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன்மூலம் கடந்த 3 நாட்களில் மொத்தம் 1,712 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

இதற்கிடையே நேற்று வடசேரி பஸ் நிலையத்தில் பஸ் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்த 2 இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் செயின் மூலம் பூட்டு போட்டு பறிமுதல் செய்தனர். அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாநகரில் தடை செய்யப்பட்ட (நோ பார்கிங்) பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தார்கள்.


Next Story