சாலையை சேதப்படுத்திய 18 பேர் மீது வழக்கு
சாலையை சேதப்படுத்திய 18 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே கல்லுக்கூட்டம் பகுதியில் வீட்டின் கழிவு நீர் வெளியேறுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு ஒரு கும்பல் அந்த பகுதியில் பொக்லைன் எந்திரத்தால் புறக்காரவிளை- பண்டாரவிளை சாலையில் காங்கிரீட் தளத்தை பெயர்த்து சேதப்படுத்தினர். இதை தடுக்க முயன்ற வார்டு உறுப்பினர் மேரி சாந்தியை தாக்கினர். இதுகுறித்து கொல்லஞ்சி ஊராட்சி தலைவர் சலோமி மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் ெகாடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் சாலைைய பொக்லைன் எந்திரத்தால் பெயர்த்ததாக செறுவாரவிளையை சேர்ந்த ஜஸ்டின்ராஜ் (வயது44), ஜெயசிங், ஜாண்சன் என்ற மணி மற்றும் கண்டால் தெரியும் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story