லங்கர் கட்டை விளையாடிய 2 பேர் மீது வழக்கு
லங்கர் கட்டை விளையாடிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
விராலிமலை தாலுகா தேராவூர் மேட்டுப்பட்டியில் கற்பக விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் பழனி பாதயாத்திரை செல்லும் விழாவையொட்டி நாடகம் நடைபெற்றது. அப்போது கற்பக விநாயகர் கோவில் அருகே சிலர் லங்கர் கட்டை விளையாடுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் பொது இடத்தில் லங்கர் கட்டை விளையாடிய விராலிமலை அம்மன்கோவிலை சேர்ந்த வெற்றிவேல் (வயது 79), மீனவேலி வெள்ளையகவுண்டம்பட்டியை சேர்ந்த முருகேசன் (41) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story