டெம்போவை விற்ற 2 பேர் மீது வழக்கு
டெம்போவை விற்ற 2 பேர் மீது வழக்கு
குளச்சல்:
குளச்சல் அருகே பெத்தேல்புரம் சேனம்விளை பகுதியை சேர்ந்தவர் செல்லம் (வயது 71), வியாபாரி. இவருக்கு சொந்தமான டெம்போவில் அதே பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் (35) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ஜெபஸ்டின் டெம்போவை ஓட்டி சென்றுள்ளார். அப்போது டெம்போ பழுதானதாகவும், இதனால் அங்குள்ள ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு வந்து விட்டதாக செல்லத்திடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வாகனத்தை பழுது பார்ப்பதற்காக ஜெபஸ்டின் குறிப்பிட்டிருந்த அந்த பகுதிக்கு செல்லம் சென்றார். ஆனால் அங்கு டெம்போவை காணவில்லை. இதுதொடர்பாக விசாரித்தபோது டெம்போ பழுதாகவில்லை என்பதும், அதனை ஜெபஸ்டின் அதே பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (47) என்பவருடன் சேர்ந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஜெபஸ்டினிடம் கேட்டபோது செல்லத்துக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து செல்லம் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். ஆனால் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து செல்லம் இரணியல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டெம்போவை விற்ற ெஜபஸ்டின் மற்றும் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு குளச்சல் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.