கூலித்தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு


கூலித்தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூலித்தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே சின்னகள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45), கூலித்தொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (22) என்பவர் அவரது நண்பர்களுடன் கைப்பந்து விளையாடினார். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற சேகரின் மனைவி கனகவள்ளியின் மீது கைப்பந்து பட்டுள்ளது. இதை கனகவள்ளி, தனது கணவர் சேகரிடம் கூறியுள்ளார். உடனே அவர், விக்னேஸ்வரனிடம் சென்று தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், வைத்தியநாதன் ஆகிய இருவரும் சேர்ந்து சேகரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் விக்னேஸ்வரன், வைத்தியநாதன் ஆகியோர் மீது வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story