மூதாட்டியை தாக்கிய 2 பெண்கள் மீது வழக்கு


மூதாட்டியை தாக்கிய 2 பெண்கள் மீது வழக்கு
x

நெல்லையில் மூதாட்டியை தாக்கிய 2 பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே உள்ள பற்பநாதபுரத்தை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவருடைய மனைவி பேரின்பம் (வயது 67). அதே பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர்களுக்குள் இடம் பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று பேரின்பம் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஜார்ஜின் மகள்கள் அமுதா, டைசி ஆகியோருக்கும், பேரின்பத்திற்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அமுதா, டைசி ஆகியோர் சேர்ந்து பேரின்பத்தை அவதூறாக பேசி, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேரின்பம் சிவந்திபட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சொரிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story