முன்விரோத தகராறில் 2 பெண்கள் மீது வழக்கு


முன்விரோத தகராறில் 2 பெண்கள் மீது வழக்கு
x

முன்விரோத தகராறில் 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள வானத்திரியான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த முத்தையனின் மனைவி ஜெயலலிதா(வயது 36). கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கணேசனின் மனைவி செந்தாமரைக்கும் பாகப்பிரிவினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசில் இரு தரப்பினரும் புகார் அளித்தனர். அதன்பேரில் ஜெயலலிதா மற்றும் செந்தாமரை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story