மது விற்ற 2 பெண்கள் மீது வழக்கு
மது விற்ற 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிமடம்:
ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துக்குறிச்சி பகுதியில் மது விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். இதில் ஒரு பெண் அந்த வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சூசைமணியின் மனைவி ஜானகி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் நாகம்பந்தல் பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த உத்திராபதியின் மனைவி சாந்தி என்பவர் மீது வழக்குப்பதிந்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.