சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 2 பெண்கள் மீது வழக்கு


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 2 பெண்கள் மீது வழக்கு
x

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சேலம்

ஆத்தூரை சேர்ந்த செல்வி (வயது 52) என்பவரும், சித்தனூரை சேர்ந்த சாந்தி (51) என்பவரும் நேற்று முன்தினம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி திடீரென மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் தற்கொலைக்கு முயன்றதாக சேலம் டவுன் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story