போக்குவரத்து விதிகளை மீறிய 200 பேர் மீது வழக்கு


போக்குவரத்து விதிகளை மீறிய 200 பேர் மீது வழக்கு
x

ஊட்டியில் போக்குவரத்து விதிகளை மீறிய 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நீலகிரி

ஊட்டி,

கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் வார விடுமுறை நாட்களில் ஊட்டிக்கு மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா வருகின்றனர். அவர்கள் சாலைகளில் அதிவேகமாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து அதிவேகமாக செல்வதை கட்டுப்படுத்தவும், அதிவேகமாக செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீசார் ஊட்டியில் உள்ள முக்கிய இடங்களில் வாகன சோதனை நடத்தினர். ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வின்சென்ட் மற்றும் போலீசார் நவீன கருவி வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுகிறதாக என சோதனை மேற்கொண்டனர். இதில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற வாகன ஓட்டிகள் அதிவேகமாக சென்றது தெரியவந்தது. தொடர்ந்து 200 பேர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மலைப்பாதையில் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story