கோவிலில் அத்துமீறி நுழைந்த 3 பேர் மீது வழக்கு
திசையன்விளை அருகே கோவிலில் அத்துமீறி நுழைந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை அருகே மகாதேவன்குளத்தில் தேவி பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. சண்முகபுரத்தை சேர்ந்த ராஜகோபால் (வயது 44), ராஜேஷ் (42), மகாதேவன்குளம் ராமமூர்த்தி (45) ஆகிய 3 பேர் கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த முள்வேலியை அகற்றி, கோவில் முன்பக்க பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது.
அதை தட்டிகேட்ட கீரைக்காரன்தட்டு கிராமத்தை சேர்ந்த பரமசிவன் நாடார் மகன் வேல்முருகனை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேல்முருகன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார், ராஜகோபால் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்.
Related Tags :
Next Story