வண்டல் மண் கடத்த முயற்சி 3 பேர் மீது வழக்கு
நாககுப்பம் ஏரியில் வண்டல் மண் கடத்த முயற்சி 3 பேர் மீது வழக்கு 2 டிராக்டர்கள், பொக்லைன் எந்திரம் பறிமுதல்
சின்னசேலம்
சின்னசேலம் அடுத்த நாககுப்பம் ஏரியில் இருந்து வண்டல் மண் கடத்தி செல்ல இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது நாககுப்பம் ஏரியில் மர்ம நபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம், 2 டிராக்டர் டிப்பர்களில் வண்டல் மண்ணை அள்ளி கடத்தி செல்ல முயன்றனர். இதைப்பார்த்த போலீசார் விரைந்து சென்று மர்ம நபர்களை சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் அவர்கள் நாககுப்பம் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் இளவரசன்(வயது 36), ஆறுமுகம் மகன் முருகேசன்(43), பெருமாள் மகன் சின்ராசு (33) என்பதும் ஏரியில் இருந்து வண்டல் மண்ணை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 டிராக்டர் டிப்பர்கள், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.