பாதை தகராறில் 3 பேர் மீது வழக்கு


பாதை தகராறில் 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Sept 2022 11:44 PM IST (Updated: 3 Sept 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

பாதை தகராறில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வாத்திக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சேப்பெருமாள். விவசாயி. இவரது மகன்கள் முருகேசன், செல்வராசு. இவர்கள் இருவருக்கும் பாதை பிரச்சினை சம்மந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் முருகேசனை செல்வராசு, அவரது மகன் ரஜினி மற்றும் உறவினர் சங்கர் ஆகிய 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story