சிறுவனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


சிறுவனை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
x

சிறுவனை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மகன் சீனு (வயது 14). இவர் சிலால் உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று சீனுவை அவரது தந்தை கடைக்கு சென்று டீ வாங்கி வர கூறியுள்ளார். இதையடுத்து, கடைவீதியில் டீ வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பிய போது அதே பகுதியில் வசிக்கும் கண்ணையன் மகன் சீனு (20), குமார் மகன் அய்யப்பன் (19), மகாலிங்கம் மகன் பாலமுருகன் ஆகியோர் சீனுவை வழிமறித்து பெட்ரோல் பங்கில் இருந்து மோட்டார் எடுத்து சென்றாயா? என்று கேட்டுள்ளனர். தான் மோட்டாரை எடுத்துச் செல்லவில்லை என்று சீனு கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் சீனுவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சீனு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சீனு அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிறுவனை தாக்கிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story