பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
x

தோட்டத்தில் ஆடுகள் மேய்ந்ததை கண்டித்ததால் பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள செங்குறிச்சி பாண்டியனூரை சேர்ந்தவர் விஜயா (வயது 30). இவரது தோட்டத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (33) என்பவரது ஆடுகள் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனை விஜயா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பஞ்சவர்ணம் மற்றும் அவரது உறவினர்கள் சின்னம்மாள், அரியம்மாள் ஆகியோர் சேர்ந்து விஜயாவை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த விஜயா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தோட்டத்தில் ஆடுகள் மேய்ந்ததை கண்டித்ததால் பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.தோட்டத்தில் ஆடுகள் மேய்ந்ததை கண்டித்ததால் பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த சம்பவம் குறித்து விஜயா கொடுத்த புகாரின் பேரில் பஞ்சவர்ணம், சின்னம்மாள், அரியம்மாள் ஆகிய 3 பேர் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story