டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி பணம் கேட்ட 3 பேர் மீது வழக்கு


டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி பணம் கேட்ட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:01 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி பணம் கேட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி பணம் கேட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொலை மிரட்டல்

மயிலாடுதுறை அருகே மாப்படுகை வள்ளலார் நகரை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஜோதி (வயது 52). இவர் மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 28-ந் தேதி ஜோதி பணியில் இருந்த போது அவரிடம், சோழம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சதீஷ், குமார், சேத்திரபாலபுரம் கிராமத்தை சேர்ந்த வைத்தி ஆகிய 3 பேர் சேர்ந்து ரூ.50 ஆயிரம் மாமுல் கேட்டதாகவும், மேலும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் மாமுல் தர வேண்டும் என்றும் கேட்டு அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களுக்கு பணம் தர மேற்பார்வையாளர் ேஜாதி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 பேரும் ஜோதியை திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஜோதி புகார் அளித்தார்.

3 பேர் மீது வழக்கு

இந்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு சதீஷ், குமார், வைத்தி ஆகிய 3 பேர் மீதும், மதுபான மேற்பார்வையாளரை பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்த சித்தர்க்காடு டாஸ்மாக் மதுபானக் கடை உள்ள பகுதிகளில் கடந்த 28-ந்தேதி அன்று, மதுபான பாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட ரூ.10 கூடுதலாக பெறுவது யார் என்று எங்களுக்கு தெரிய வேண்டும், அதுவரை கடையை மூடுமாறு சில இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story