கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தூத்துக்குடி
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மாரியப்பன் (வயது 43). இவருக்கு முத்தையாபுரத்தில் 3 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்திற்கு அருகே குடியிருக்கும் சோலைராஜ்க்கும், இவருக்கும் இடத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாரியப்பன் நில அளவையர்களை கொண்டு அளவீடு செய்து உடனடியாக எல்லையில் சுவர் கட்டியுள்ளார். இந்த நிலையில் மீண்டும் இடத்திற்கு சென்று அவர் பார்வையிட்டபோது கட்டியிருந்த தடுப்புச்சுவர் இடிக்கப்பட்ட நிலையில் இருந்தது. அதனை பார்த்துக்கொண்டிருந்தபோது சோலைராஜ் மற்றும் அவருடைய தந்தை ரத்தினசாமி, தாயார் சித்ரா ஆகியோர் மாரியப்பனிடம் தகராறில் ஈடுபட்டு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story